Saturday, July 4, 2026
No menu items!

குற்றப்பத்திரிகை

ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி – சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனைகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சர்வதேச ஊடகங்கள் இதை மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியாக வெளிப்படுத்துகின்றன. 2024 ஆம் ஆண்டு மாணவர் முன்னிலையில் வெடித்த போராட்டங்களை அடக்குவதற்காக படுகொலை, சித்திரவதை மற்றும்...

முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாரிப்பு!

அண்மைய காலங்களில் நடந்த 20க்கும் மேற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. குற்றப்பத்திரிகைகளைத் தயாரிப்பதில் விசேட குழுவொன்று தற்போது ஈடுபட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உள்ளவர்களில் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவிற்கு எதிராக இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சந்திராணி பண்டார, அமைச்சராக இருந்தபோது சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சின் திட்ட இயக்குநராக எச்.எம். சந்திரவன்சவை...

மெர்வின் சில்வா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது . 800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி ஆகியோரை பிணையில் விடுவிக்க உத்தரவு!

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டது. இருவர் மீதும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன் ஒப்படைக்கப்பட்டன. பின்னர்...

யோஷித மற்றும் அவரது பாட்டிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்..!

சட்டவிரோத பண மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் ஆகிய இருவருக்கும் எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 80 மில்லியன் ரூபாவுக்கு மேல்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்..!

சர்ச்சைக்குரிய க்ரிஷ் திட்டம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை…!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (10.10.2024) கையளிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு, கிரீஸ் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, ​​இலங்கை அரசுக்கு சொந்தமான பணத்தை கிரீஸ் பத்திரங்களில் முதலீடு செய்து இலங்கை அரசுக்கு 1.8 பில்லியன்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img