Sunday, November 8, 2026
No menu items!

கைது

250 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

10 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 250 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் கைது!

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில்...

இணைய வழி நிதி மோசடி தொடர்பில் மேலும் ஒரு குழு கைது!

சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் குழுவொன்று இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 04 மலேசிய ஆண்கள், 03 எத்தியோப்பியா ஆண்கள் மற்றும் ஒரு...

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை!

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 இலட்சம் ரூபா பெறுமதியான 24,000 போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப்பிரிவு தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை வடக்கு மற்றும் ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சிறுவர்களை இலக்கு...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை…!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கல்கிசை , படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த...

வீதியில் விழுந்து கிடந்த நபர் மீது மோதிய கார்…!

ஹெட்டிப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துத்திரிபிட்டிகம பிரதேசத்தில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹெட்டிப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகவெல பிரதேசத்தை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் விழுந்து கிடந்த நபர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது,  வீதியில் விழுந்து கிடந்த நபர் காயமடைந்துள்ள நிலையில் ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…!

கல்கிஸ்ஸ - ஒடியன் சந்தி பகுதியில் கல்கிஸ்ஸ பிரிவு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 1,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான...

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது…!

கல்கிசை பொலிஸ்  பிரிவுற்குட்பட்ட படோவிட்ட மற்றும் ஒபியன் சந்திக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இரத்மலானை மற்றும்...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது…!

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரைட்வெல் தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவரை உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் 38 மற்றும் 42 வயதுடைய பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இலங்கை கடற்படையினரால்  413 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதற்காக இவ்வருடம் 413 இந்திய மீனவர்கள் இதுவரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மீனவர்களுடன் 55 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று(29.09.2024) மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img