Sunday, November 8, 2026
No menu items!

கைது

10 கோடி ரூபா பெறுமதியான அம்பர் தொகையுடன் ஒருவர் கைது…!

ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கென்தலியத்தபாலுவ பிரதேசத்தில் 10 கோடி ரூபா பெறுமதியான அம்பர்  (திமிங்கலத்தின் வாந்தி) தொகையுடன் சந்தேக நபரொருவர் மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (25.10.2024) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில்...

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநீக்கம்….!

பமுனுகம பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களைப் பலமாகத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போபிட்டிய, பமுனுகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இரு இளைஞர்கள் திருட்டு சம்பவம் ஒன்று...

நபர் ஒருவரை பலமாக தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய நடவடிக்கை…!

நபர் ஒருவரை பலமாக தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்நிலையில், குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இது தொடர்பான முறைப்பாட்டை பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர்,...

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணம் நெல்லியடியில் இருந்ததாக  பொலிஸ் மா அதிபர் நிஹால் த்ல்துவ  தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக குறித்த அரசியல்வாதி...

நாங்கள் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதில்லை; ஜனாதிபதி!

அண்மைய புலனாய்வு அறிக்கைகளை அடுத்து பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு உறுதியளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “உளவுத்துறை தகவல் தொடர்பில் நாங்கள் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதில்லை. நாங்கள் உடனடியாகச் செயல்பட்டு சிலரைக் கைது செய்தோம். இது செய்தியாக வரவில்லை என்றாலும், அனைவரின்...

ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான அம்பர் வைத்திருந்த இருவர் கைது!

பெந்தோட்டை பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றில் இன்று (23) அதிகாலை ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஒன்றரை கிலோ கிராம் அம்பர் (திமிங்கில வாந்தி) வைத்திருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரும், பியகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஒருவருமே...

சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் 10 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகில் வீடொன்றில் கசிப்பு விற்பனையில் நபரொருவர் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 10 லீட்டர் கசிப்பை மீட்டதுடன் , அதனை விற்பனைக்கு வைத்திருந்த நபரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய்...

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது…!

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் அக்கரைப்பற்று-பாலமுனை பிரதேசத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்கள் 34,43 மற்றும் 46 வயதுடைய களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது அக்கறைப்பற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது, கார் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில்...

கொலை தொடர்பில் பெண்ணொருவர் கைது…!

பெண்ணொருவரின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் வெலிவேரிய, எம்பறலுவ தெற்கு பிரதேசத்தில் 58 வயதுடைய பெண்ணொருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்ற இரண்டாவது சந்தேகநபரான...

பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் 9 பேர் கைது…!

பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8 ஆகும். இதேவேளை, தேர்தல் தொடர்பில் 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பெறப்பட்டுள்ளன. இதேவேளை, தேர்தல் சட்டங்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img