Saturday, November 21, 2026
No menu items!

கொழும்பு நீதவான் நீதிமன்றம்

இ-டிக்கெட் மோசடி – நீதிமன்றின் உத்தரவு..!

ரயில்வே திணைக்களத்தால் வழங்கப்பட்ட இ-டிக்கெட்டுகளை இணையத்தில் சட்டவிரோதமாக வாங்கியது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையத்தின் மூலம் வாங்கிய இரண்டு பயணசீட்டுகளை வெளிநாட்டினருக்கு 27,000 ரூபாவுக்கு விற்ற சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்...

யோஷித பிணையில் செல்ல அனுமதி..!

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடியில்  முன்னாள் அமைச்சர் கைது!

2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் அவரது மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த நிதி 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில்...

ரயில்வே இ-டிக்கெட் மோசடி – சி.ஐ.டியினரின் விசாரணை தீவிரம்..!

ரயில்வே திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20/1/2025) அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிய அதிபருக்கு விளக்கமறியல்..!

குழந்தை ஒன்றை முதலாம் வருடத்திற்கு அனுமதிப்பதற்காக பத்து சீமெந்து பைகளுக்கு 18,520 ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20/1/2025) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பண்டாரவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின்...

ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை – வெளியானது காரணம்..!

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன், 1,500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பை அறிவித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, உத்தரவிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதியன்று கிருலப்பனையில்...

காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு பிணை..!

கண்டி பல்லேகெலேவில் நடைபெற்ற லங்கா T-10 கிரிக்கெட் போட்டித் தொடரின் போது மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஒருவருக்கு ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் பிரேம் தக்கரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின...

தேர்தல் செலவினங்களை சமர்ப்பிக்கத் தவறிய பிரதிநிதிகள்- விசாரணைகள் ஆரம்பம்..!

மோசடி விசாரணைப் பணியகம் (FIB) 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் தேவையான செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய அவர்களின் பிரதிநிதிகள் மீது விசாரணையைத் தொடங்கியது. இன்று (13) நீதிமன்ற அமர்வின் போது, ​​தேர்தல்கள் ஆணைக்குழுவால் (EC) தாக்கல் செய்யப்பட்ட 7 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயலாளர் ரேணுக பெரேராவிற்கு பிணை..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேராவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (5) பிணை வழங்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் நடைபெற்ற மகாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அர்ஜுன மகேந்திரனை  நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img