Hand about to bang gavel on sounding block in the court room

குழந்தை ஒன்றை முதலாம் வருடத்திற்கு அனுமதிப்பதற்காக பத்து சீமெந்து பைகளுக்கு 18,520 ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20/1/2025) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பண்டாரவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடரும் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழங்கிய அறிவித்தலை பரிசீலித்த நீதவான், குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதிபர், குறித்த பாடசாலையில் பிள்ளையொன்றைச் சேர்ப்பதற்காக, பத்து சீமெந்து பைகளுக்கான தொகையை, பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள வியாபாரிக்கு செலுத்துமாறு முறைப்பாட்டாளரிடம் உத்தரவிட்டுள்ளார்.

பின்னர், பணம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்திய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இவரை கைது செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here