Sunday, November 8, 2026
No menu items!

கொழும்பு

கொழும்பு கிரிஷ் கட்டடத்தில் இடம்பெற்ற தீ விபத்து!

தீப்பரவல் ஏற்பட்ட சர்சைக்குரிய கொழும்பு – கோட்டையில் அமைந்துள்ள கிரிஷ் கட்டடத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று பரிசோதனை செய்யவுள்ளார். குறித்த கட்டடத்தின் 33ஆவது தளத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டது. தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபையின் 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 32 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் இருந்த பல மரப்...

ரயில்களில் மூன்றாம் வகுப்பு இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதி நீக்கம்!

கொழும்பு கோட்டை - பதுளை, பதுளை - கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை – தலைமன்னார் மற்றும் தலைமன்னார் - கொழும்பு கோட்டை இடையே இயங்கும் ரயில்களில் மூன்றாம் வகுப்பு இருக்கைகளை மார்ச் 10 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யும் வசதிகளை நீக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, காலை 5.55 மணிக்கு...

விசா விண்ணப்பங்களுக்கான புதிய செயல்முறை அறிவிப்பு!

விசா விண்ணப்பங்களுக்கான புதிய செயல்முறையை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்  அறிவித்துள்ளது. இந்த முறை பெப்ரவரி 8, 2025 முதல் அமலுக்கு வருகிறது. சனிக்கிழமை முதல் விசா தொடர்பான அனைத்து ஆவண சமர்ப்பிப்புகளும் வசூல்களும் VFS கூரியர் சேவைகள் மூலம் செய்யப்பட வேண்டும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது. தூதரகம் இனி நேரடி சமர்ப்பிப்புகள் அல்லது வசூல்களை ஏற்காது. இந்த மாற்றம்...

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ள கருத்து!

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழிலைக் கட்டுப்படுத்துவதற்காகச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு வாரங்களில் இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினையாகும். பல அரசாங்கங்கள் கலந்துரையாடிய பிரச்சினையாகும். இந்திய -...

பாரியளவில் சரிவடைந்த பங்கு விலைச் சுட்டெண்..!

கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்கள் இன்று (05) பாரியளவில் சரிவடைந்துள்ளன. அதன்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு பிறகு வரலாற்றில் ஒரே நாளில் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று பாரியளவில் சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாள் நிறைவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 500.39 புள்ளிகள் குறைந்து 16,456.10...

பேர வாவியில் விலங்கினங்களின் இறப்புக்கு காரணம் என்ன?

கொழும்பில் உள்ள பேர வாவியில் விலங்கினங்கள் இறந்ததற்கு பாக்டீரியா தொற்று காரணம் என ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இறந்த விலங்குகளின் திசுக்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பாஸ்டுரெல்லா மல்டோசிடா என்ற பாக்டீரியா தொற்று காரணமாகவே விலங்கினங்கள் இறந்துள்ளதாக தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி முகமது இஜாஸ் தெரிவித்தார். அண்மைய நாட்களில்...

நாட்டின் அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டும்; ஜனாதிபதி!

நாட்டில் சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான சுதந்திரத்தினை முழுமையாக வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் நாட்டின் அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு - சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்ற நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை...

தேங்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள்!

சுமார் 1800 கொள்கலன்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இந்தக் கொள்கலன்களை விரைவாக அகற்றுவதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பசீவலி அருக்கொடட்டுள்ளதாக மேலதிக பணிப்பாளர் நாயகமும் சுங்கப் பேச்சாளருமான  தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமைக்குள் நெரிசலைத் தீர்ப்பது, துறைமுகத்தில் சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்களை அகற்றுவதற்கான நான்கு...

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அதன் ஒரு பகுதி முற்றாக எரியுண்டுள்ளது. நேற்றிரவு 7.45 அளவில் குறித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த தீப்பரவலை கொழும்பு துறைமுக தீயணைப்புத்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றிலே தீப்பரவல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தல்காரரான கல் சம்பத் கைது!

கொழும்பு - மட்டக்குளி போதைப்பொருள் கடத்தல்காரரான கல் சம்பத், சமித்புர பகுதியில் வைத்து எனப்படும் சஞ்சீவ துஷார மதுவரி திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரைக்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img