கொழும்பு – மட்டக்குளி போதைப்பொருள் கடத்தல்காரரான கல் சம்பத், சமித்புர பகுதியில் வைத்து எனப்படும் சஞ்சீவ துஷார மதுவரி திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரைக் காப்பாற்ற முற்பட்டதுடன், குறித்த நபர் மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான குறித்த அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.







