தீப்பரவல் ஏற்பட்ட சர்சைக்குரிய கொழும்பு – கோட்டையில் அமைந்துள்ள கிரிஷ் கட்டடத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று பரிசோதனை செய்யவுள்ளார்.
குறித்த கட்டடத்தின் 33ஆவது தளத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டது.
தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபையின் 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 32 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தில் இருந்த பல மரப் பலகைகள் எரியுண்டுள்ளன.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.








