Wednesday, June 10, 2026
No menu items!

சீரற்ற காலநிலை

மட்டுப்படுத்தப்பட்டுள்ள அஞ்சல் தொடருந்து சேவை !

சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இரவு நேர நீண்ட தூரத் தொடருந்து சேவைகளைத் திட்டமிட்டபடி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வீட்டினுள் புகுந்த சிறுத்தை..!

முல்லைத்தீவு, விசுவமடு - இளங்கோபுரம் பகுதியில் சிறுத்தை ஒன்று வீடு ஒன்றிற்குள் புகுந்த சம்பவம் நேற்று (27.11.2024) பதிவாகியுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு, இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது. இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த சிறுத்தையை மீட்டு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், தற்போது நிலவும் சீரற்ற...

மட்டக்களப்பில் 7,241 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,890 குடும்பங்களைச் சேர்ந்த 37,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 இடைத்தங்கல் முகாம்களில் 2,558 குடும்பங்களைச் சேர்ந்த 7,241 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கிவருவதுடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான படகு சேவை நடைபெற்றுவருவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார். இந்த சீரற்ற கால...

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் நெற்பயிர்ச்செய்கை பாதிப்பு..!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 910 அங்கத்தவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்பொழுது வரை ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் காரணமாக பகுதி அளவில் 25 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும்...

சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்துள்ள விவசாயநிலங்கள்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4, 800 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக 2, 000 மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் சுமார் 3, 900 ஏக்கருக்கும் அதிக...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்!

இன்று காலை 10.00 மணி நிலவரப்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அம்பாறையில் 8 இறப்புகளும், பதுளை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அனர்த்த சம்பவங்களினால் இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும், 17 பேர்...

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைகள் டிசம்பர் 4 ஆம்...

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்..!

ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் பலரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். பல விவசாய நிலங்களும் நீரினால் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் இடைத்தங்கள் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில்1043...

சீரற்ற காலநிலையால் 4 பேர் உயிரிழப்பு..!

நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான்கதவுகளும் திறப்பு!

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான்கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் கலாவாவிக்கு அதிகளவில் நீர் விடுவிக்கப்படுகிறது. இதன்காரணமாக நொச்சியாகம, ராஜாங்கனை, வண்ணாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வௌ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கலா ஓயாவை அண்மித்த தாழ்நில பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம், களனி ஆற்றின் பெரும்பாலான நீரேந்தும்...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img