Friday, April 17, 2026
No menu items!

சொத்து

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நகுலுகமுவ மற்றும் மீரிகமவுக்கு இடையே எரிபொருள் தாங்கி ஊர்தியொன்றும் பாரவுவூர்தியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்ததாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்புக்கு பயணிக்கும் வீதியில் 41.1 ஆவது கிலோமீற்றர் பகுதியில் இரண்டு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் கவிழ்ந்து...

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன் – மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர்!

ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இன்று (27.08.2025) இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் கூறுகையில் , ரணில் கைதுக்கு ஓடிச்சென்று விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் தமிழ்...

அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்ற உத்தரவு!

அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபையின் முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, தேசிய தொழில் நிறுவகத்தின் சொத்துக்களை போலி பத்திரத்தின் மூலம் குத்தகைக்கு எடுத்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பிலேயே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொண்டு வரும்...

துசித ஹல்லொலுவக்கு விளக்கமறியல்!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (02) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு...

தங்கத்தின் விலையில் அதிகரிப்பு!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் வலுவடைந்துவரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. நிதி சந்தையில் ஏற்பட்டுள்ள ஸ்திரநிலையற்ற தன்மையை அடுத்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி நகர்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, உலக சந்தையில் ஒரு பவுண்ஸ் தங்கம் 3,200...

19 வருடங்களுக்கு பின் திருத்தப்பட்டுள்ள குத்தகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரி!

சொத்துக்களுக்கான வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களுக்குப் பொருந்தக்கூடிய முத்திரை வரியை 100% அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குறித்த கட்டண அதிகரிப்பானது, இன்று செவ்வாய்க்கிழமை (01)  முதல்  அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எந்தவொரு சொத்தையும் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடும்போது, குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தத்திற்கான முழு காலத்திற்கும் குத்தகை வரி...

பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் கணக்கெடுப்பை சனிக்கிழமை நடத்த தீர்மானம்!

பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் கணக்கெடுப்பை சனிக்கிழமை (மார்ச் 15) நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை வேளாண் அமைச்சகம் எடுத்துள்ளது. இந்த நோக்கத்திற்காக விநியோகிக்கப்பட்ட படிவத்தின்படி, விவசாயிகள் தங்கள் சொத்துக்களில் அத்தகைய விலங்குகளை எண்ண ஐந்து நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. படிவத்தின்படி, விலங்கு கணக்கெடுப்பு 15 மார்ச் 2025 அன்று காலை 08.00 மணி முதல் காலை 08.05 மணி வரை...

அரகலய காலத்தில் நட்டயீடு பெற்றுக்கொண்ட எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு!

அரகலய காலத்தில் தீ வைத்து அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நட்டயீடாக மொத்தம் 1.22 பில்லியன் ரூபா பெற்ற 43 எம்.பி.க்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இழப்பீடு கோரிய முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் முழு பட்டியல்:  1.⁠ ⁠கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000 2.⁠ ⁠விமலவீர திஸாநாயக்க – ரூ. 550,000 3.⁠ ⁠கீதா குமாரசிங்க...

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து அறிக்கை தொடர்பான தகவல்!

ஜனாதிபதி வேட்பாளர்களினால் வழங்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கைகள் தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆவணங்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அணுகக்கூடியதாக உள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் 89வது பிரிவுக்கு இணங்க, வேட்பாளர்களின் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகள் அவர்களது வேட்புமனுவுடன்...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img