அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபையின் முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு, தேசிய தொழில் நிறுவகத்தின் சொத்துக்களை போலி பத்திரத்தின் மூலம் குத்தகைக்கு எடுத்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பிலேயே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு (CID) நீதிமன்றம் இந்த வழிகாட்டு உத்தரவை வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here