Friday, November 20, 2026
No menu items!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

நாளை கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு..!

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை திங்கட்கிழமை (21.04.2025) கூடவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு கூடவுள்ளது. ஜனாதிபதி கடந்த நாளொன்றில் மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து...

தலதா வழிபாட்டில் ஜனாதிபதி..!

16 வருடங்களின் பின்னர் இம்முறை இடம்பெறும் “சிறி தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (4/18/2025) மதியம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டிக்கு வந்திருந்தார். பின்னர் ஜனாதிபதி சிறி தலதா வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில்...

ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும..!

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார் பகுதியில் இன்று (4/17/2025) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள்...

நிறைவடைந்த அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை தொடர்பான கூட்டம்!

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு...

அதிகாரிகள் விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் – ஜனாதிபதி..!

கையூட்டல் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் அதிகாரிகளும் விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற 'தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029' வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி...

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (08/04/2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை, அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய அரச நிறுவனமாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் கடன் முகாமைத்துவத்துக்கான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்தும்...

கோசல நுவான் ஜயவீரவின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்…

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது பேஸ்புக் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில், "பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது." உங்களை இழந்தது மிகப்பெரிய இழப்பு... நீங்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். சகோதரர் கோசலா, உங்களுக்கு புரட்சிகரமான...

ரயில் சமிக்ஞை அமைப்பு இந்தியப் பிரதமரால் திறந்து வைப்பு..!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சில நிமிடங்களுக்கு முன்பு அநுராதபுரம் ரயில் நிலையத்தில் ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார் இந்திய பிரதமர்..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல்...

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளை அதிகாரிக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (Samuel Paparo) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (3/21/2025) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேநேரம், இந்து சமுத்திர...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img