Saturday, November 21, 2026
No menu items!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட ஜனாதிபதி..!

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு உத்தரவு பிறப்பித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். இதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவை ஜனாதிபதி...

ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு விஜயம்..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போது நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று (17.12.2024) இரவு நாட்டை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிமக்களுக்கு இலவச விசாக்கள் – அமைச்சர் விஜித ஹேரத்..!

இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கான தனது பயணத்திற்குப் பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அனைத்து...

ஜனாதிபதி இந்தியா பறந்தார்- முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்பு..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் இந்தியா சென்றுள்ள  ஜனாதிபதி இன்று (15) முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்..!

அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer) தெரிவித்தார். உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்த உலக...

புதிய பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ- இன்று சத்தியப்பிரமாணம்..!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்று (02)  உத்தியோக பூர்வமாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.  . ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்ற நிலையில்,  முர்து பெர்னாண்டோ இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் இடமில்லை; விமல் ரத்நாயக்க…!

முன்னால் அமைச்சருக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் இடமில்லை என விமல் ரத்நாயக்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்ததாக இன்று (26.10.2024) தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சிமாவட்டத்தின் வட்டக்கச்சி பகுதியில் இன்று (26.10.2024) நடைபெற்றது. இதன் போது கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!

அரசியலமைப்பின் 44 ஆவது சரத்தின் உப சரத்து (1) இன் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களின் பொறுப்பில் உள்ள விடயதானங்கள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img