Friday, June 5, 2026
No menu items!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

திரு ஆட்சிப்பீடத்தின் உயர் பிரதிநிதி பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

திரு ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இன்று (நவம்பர் 3) முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். இந்த விஜயம், இலங்கைக்கும் திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

விஷ போதைப்பொருள் ஒழிப்புக்கு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கை இன்று ஆரம்பம்!

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று (30) காலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த தேசியத் திட்டத்தின் தொடக்க நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் காலை 10.00 மணிக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும். மதத் தலைவர்கள்,...

உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் இலங்கையின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த 15ஆம் திகதி உலக வங்கி பிரதிநிதிகளை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து, இலங்கையின் தற்போதைய வளர்ச்சி திட்டங்களைப் பற்றி விவாதித்தார். அவருடன் சந்தித்திருக்கும் பிரதிநிதிகளில் ஜொஹன்னஸ் சட் உள்ளிட்ட உலக வங்கி குழும உறுப்பினர்கள் இருந்தனர். இந்த சந்திப்பில் நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பது, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்...

சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு!

தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ(Wang Wentao) , நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தும் வெளிப்படையான வேலைத்திட்டம் காரணமாக...

பதில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சேவை நீடிப்பு வழங்க அனுமதி..!

பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத சேவை நீடிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்று (22.05.2025) பிற்பகல் கூடிய அரசியலமைப்புச் சபை, ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்தப் பதவி தற்போது 44 நாட்களாக வெற்றிடமாக உள்ளது. புதிய கணக்காய்வாளர்...

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பீ.கே.கோலித கமல் ஜினதாச நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

தேசிய போர்வீரர் நினைவு விழா இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது !

யுத்த வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (19) இடம்பெறவுள்ளது. யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக முப்படைகளையும் வழி நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த...

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்!

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். ஆஜன்டீனா குடியரசு (Argentine Republic) சிம்பாப்வே குடியரசு (Republic of Zimbabwe), இஸ்ரேல் (Israel), பிலிபைன்ஸ் குடியரசு (Republic of the Philippines), டஜிகிஸ்தான் குடியரசு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை வெளிப்படுத்தாத ஜனாதிபதி – விமர்சித்த சஜித்!

திஸ்ஸமஹாராமவில் நடந்த மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளை 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்திருந்த போதிலும், அவ்வாறு எவ்வித அறிவிப்பும் செய்யப்படவில்லை என விமர்சித்தார். அரசாங்கம் மக்களை ஏமாற்றி, சாக்குப்போக்குகளை கூறுவதாகவும், தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி...

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்..!

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் இரங்கலை பதிவிட்ட ஜனாதிபதி, இலங்கை மக்கள் சார்பாக பாப்பரசருக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயத்திற்காக அவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img