Wednesday, November 11, 2026
No menu items!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

உயர்நீதிமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தடை கோரி மனு தாக்கல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலம் தொடர்பில் தெளிவூட்ட வேண்டுமெனக் கோரி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை (03) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தை தெளிவூட்டவேண்டுமென உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு, வர்த்தகரான சீ.டிலெவனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் தற்போ​தைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மறைமுக அறிவிப்பை வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க…!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக களமிறங்குவதற்கான அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளார். ‘நான் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறேன் - நீங்கள் என்னுடன் முன்னேறுவீர்களா?, அல்லது இருட்டில் தடுமாறிக்கொண்டிருப்பவர்களுடன் ஒத்துப்போவீர்களா? இல்லையெனில், இன்னும் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளாமல் போராடுவீர்களா?' என்று அவர் கேட்டுள்ளார். இந்த கேள்விகள் அவர் தேர்தலில்...

அரச நிலங்களை பெறமுடியும்; சந்தை ஆய்வாளர்கள் தெரிவிப்பு….!

இலங்கையில் பூர்வீக  காணி  உரிமை இல்லாத 24 லட்சம் குடும்பங்களுக்கு உரிமப் பத்திரங்கள் வழங்கப்படுவதால், காணிகளின் விலை குறையும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகையில் அரசுக்கு சொந்தமான காணிகளை தனியாருக்கு மாற்றுவதன் ஊடாக இது நாட்டிலேயே மிகப்பெரிய தனியார்மயமாக்கல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிலேயே அதிகளவான...

அமைச்சரவை மாற்றமா? அரசியல் வட்டாரங்களின் தகவல்கள்…

எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சாத்தியமான மறுசீரமைப்பு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது வரவிருக்கும்...

ஜனாதிபதி உரை பற்றிய சஜித்தின் எதிர்வுகூறல்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எதிர்வு கூறியுள்ளார். இதற்கமைய நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டதாக ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கூறுவார் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறு நாடு வங்குரோத்திலிருந்து மீண்டதாக ஜனாதிபதி கூற முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டு வணிகக் கடன்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித...

கைச்சாத்து இடப்படும் உடன்படிக்கை…!!

இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கை நாளை (26.06) கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன  இது தொடர்பில் இன்று விளக்கமளித்தார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவான விளக்கம் ஜனாதிபதியினால் நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாகவும்  அது தொடர்பான உடன்படிக்கையில் நாளை கைச்சாத்திடுவதற்காக  பாரிஸ் கழகத்தின் அதிகாரிகளை சந்திப்பதற்காக நிதி...

நெல் கொள்வனவுக்காக வழங்கப்படும் வங்கிக் கடன்…!!

பெரும்போக மற்றும் சிறுபோக நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கே அனுமதி கிடைத்துள்ளது. 2024 சிறுபோகத்தில் நெல் கொள்வனவுக்கான கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற...

வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அரசாங்கம்! சஜித் குற்றச்சாட்டு…

அரசாங்கம் முன்னணி வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபா வரிச் சலுகை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தெடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த அடிப்படையில் அரசாங்கம் இவ்வாறு வரிச் சலுகை வழங்கியது. வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை வழங்கியிருக்காவிட்டால் பொதுமக்களிடம் புதிதாக வரி அறவீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் மீது வரி விதித்து...

ரணிலுக்கு கிடைத்துள்ள விசேட அழைப்பு…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு , இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு ஒன்றினை விடுத்துள்ளார். நடந்து முடிந்த இந்திய தேர்தல் வெற்றி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில், இந்திய பிரதமருக்கு தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதன்  போது ரணில் விக்ரமசிங்கவிற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி பாராட்டியுள்ளார். இதற்கமைய மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுக்...

நாடு முழுவதும் ஆயுதப் படைகள்!!!  

நாடு முழுவதும் பொதுப் பாதுகாப்புக்காக ஆயுதப் படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04.06.2024) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 12ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

யாழில் சுகாதார திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி

இலங்கையின் நீர் மற்றும் சுகாதார திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 300 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க அனுமதி அளித்துள்ளது. இதில் 200 மில்லியன் டொலர்...
- Advertisement -spot_img