Thursday, November 12, 2026
No menu items!

ஜனாதிபதி

“குடிசன  மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட  “குடிசன  மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 2024 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த  தொகைமதிப்பின் முதற்கட்ட அறிக்கை, தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் குடிசனம், குடிசன வளர்ச்சி மற்றும் மாவட்ட...

2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வு ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முதன்மை வெளியீடான 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வு (AER 2024), இன்று ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுர குமார திசாநாயக்கவிடம் வழங்கப்பட்டது. சமீபத்திய வரலாற்றில் நாட்டின் மிகக் கடுமையான பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார மீட்சியின் நிலையான முன்னேற்றத்தை இந்த வெளியீடு எடுத்துக்காட்டுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு 14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த வெளியீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீனவர்கள் கைது மற்றும் நீண்டகால பிரச்சினைகள் குறித்தும் விவாதங்கள்...

இந்திய – இலங்கை பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல்..!

இந்திய-  இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இலங்கை அரசாங்கத்தின் சார்பில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில்...

இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (4/5/2025) முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரி குறித்து பரிந்துரைகளை வழங்க புதிய குழு நியமிப்பு;ஜனாதிபதி!

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்படும் பரஸ்பர வரிகளால் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வை மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒரு குழுவை நியமித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) கூற்றுப்படி, இந்தக் குழுவில் ஆடைத் துறை உட்பட இலங்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும், அரச அதிகாரிகளும் உள்ளனர். நிதி அமைச்சின் செயலாளர்,...

19 வருடங்களுக்கு பின் திருத்தப்பட்டுள்ள குத்தகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரி!

சொத்துக்களுக்கான வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களுக்குப் பொருந்தக்கூடிய முத்திரை வரியை 100% அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குறித்த கட்டண அதிகரிப்பானது, இன்று செவ்வாய்க்கிழமை (01)  முதல்  அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எந்தவொரு சொத்தையும் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடும்போது, குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தத்திற்கான முழு காலத்திற்கும் குத்தகை வரி...

ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு இல்லை; ஜனாதிபதி!

ஊழல்வாதிகள் மீண்டும் நாட்டில் அரசாங்கங்களை அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நேற்று புத்தல நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் உரையாற்றுகையில், “முன்னதாக தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்குப் பணம் செலுத்த...

பாராளுமன்ற பிரதான நுழைவு வாயில் பழுது..!

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயில் (தம்பதொர) பழுதடைந்துள்ளமையினால் இராணுவத்தினரை ஈடுபடுத்தி சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசேட நிகழ்வுகளின்போது ஜனாதிபதியோ அல்லது பிற நாட்டுத் தலைவர்களோ இந்த செப்புக் கதவு வழியாகத்தான் பாராளுமன்றத்துக்குள் நுழைவார்கள். அறிக்கையின்படி, செப்புக் கதவை உயர்த்தவும் குறைக்கவும் பயன்படுத்தப்படும் "தாங்கி" பாகங்கள் தேய்ந்துவிட்டன. செப்புக் கதவு பழுதுபார்ப்பதற்குத் தேவையான...

பணியை சரியாக செய்ய முடியாமல் புலம்பிக்கொண்டு கிராமத்து அதிகாரத்தை கேட்கின்றனர் – சஜித்!

2/3 பெரும்பான்மையையும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியையும் வைத்துக் கொண்டு பணியை சரியாக செய்ய முடியாமல் புலம்பிக்கொண்டு கிராமத்து அதிகாரத்தையும் கேட்கின்றனர். நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது என்று வீதியில் இறங்கி மக்களிடம் கேட்டால் பதில் வழங்குவார்கள். மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மக்கள் விரக்தியடைந்துள்ளனர். பொய் வென்று உண்மை தோற்றுவிட்டது. இன்று மக்கள் வாழ முடியாத நிலையில் வருமானம் இல்லாமல்...
- Advertisement -spot_img

Latest News

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் 'ஐஸ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்...
- Advertisement -spot_img