Tuesday, November 17, 2026
No menu items!

ஜனாதிபதி

இன்று முதல் வாக்கு பெட்டிகளை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்!

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது.  இந்த தேர்தலுக்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 41,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதற்காக நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு...

அதிகரித்துள்ள ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள்!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 208 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இது வரை 4, 945 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் 1,515 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 3,429...

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கடமைகளுக்காக பேருந்துகள் ஒதுக்கீடு!

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலைமுன்னிட்டு, தேர்தல் கடமைகளுக்காக 1,360 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த பஸ்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தேர்தல் தொடர்பான காவல்துறை பணிகளுக்காக 175 பேருந்துகள் ஒதுக்கப்படும், சட்ட அமுலாக்கத்திற்கு போதுமான போக்குவரத்து ஆதரவை உறுதி...

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொதுத் திரையிடுவதற்கு தடை!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனிப்பட்ட முறையில் பார்வையிடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இன்று(19.09.2024) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், தேர்தல் முடிவுகளை பொது மக்கள் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும்,...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாளை ( 20.09.2024) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாளை மறுதினம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. மேலும், 23ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்...

வாக்கு எண்ணும் நடவடிகைகள் தொடர்பாக ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு எண்ணும் நடவடிகைகள் 21 ஆம் திகதி மாலை 4 மணிக்கு பின்னர் ஆரம்பமாகும். பிரதான வாக்கு எண்ணும் செயற்பாடுகள் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஜனாதிபதி தேர்தல் கடமைகளை இலகுபடுத்தும் வகையில் கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பல விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்காக இந்த சிறப்பு ரயில்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் காலை 9 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கு ரயில் புறப்படும். மேலும், நாளை...

விசேட நடமாடும் சேவையை ஆரம்பிக்கவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு!

அமைதியான காலப்பகுதியில் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக விசேட நடமாடும் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் முழுவதிலும் விரிவான மேற்பார்வையை உறுதி செய்யும் வகையில், பிராந்திய மனித உரிமை அலுவலகங்களால் இந்த முயற்சி ஒழுங்குபடுத்தப்படும் என ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி...

வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பட்டியல்!

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பட்டியலை விவரிக்கும் ஊடக அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்குச்சாவடி ஊழியர்கள், தேர்தல் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள், அவர்களது தேர்தல் மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட...

சில சமயங்களில் நான் கோட்டாபய மீது பரிதாபப்படுகிறேன் ; அனுரகுமார திஸாநாயக்க!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பலிகாடாக பயன்படுத்தப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பேரணியில் உரையாற்றிய NPP எம்.பி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நெருக்கடியை திட்டமிட்டார், ஆனால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த பிரச்சினையின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. “எரிபொருள், எரிவாயு...
- Advertisement -spot_img

Latest News

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (17) அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த...
- Advertisement -spot_img