சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றம் நியமிக்கும் விசேட குழுவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், தயாசிறி ஜயசேகர, மற்றும் இராசமாணிக்கம் இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோர் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு பேரின் பெயர்கள் நேற்று (11) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மூலம் நாடாளுமன்றப் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீரவுக்கு எழுத்து மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

கயந்த கருணாதிலக்க தெரிவித்ததாவது, இந்த விசேட குழு விரைவில் கூடும் என்றும், 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் முழுமையான விசாரணை நடைபெறும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த விசேட குழுவில் ஆளும் கட்சியிலிருந்து எட்டு உறுப்பினர்கள் பெயரிடப்படவுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here