நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பாக விசாரணை செய்ய மூவரடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார்.

கடந்த , மே 20ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தயாசிறி ஜயசேகரவின் நடத்தைக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில்  சபாநாயகர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

விசாரணைக் குழுவின் தலைவராக குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமலி வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவில் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here