Tuesday, June 9, 2026
No menu items!

தீபாவளி

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாகாண ஆளுநர்கள் இந்த விடுமுறை தினத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படும் அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும், எதிர்வரும் சனிக்கிழமை (25) பாடசாலைகளை நடத்துமாறு...

தீபாவளி பயண நெரிசலைச் சமாளிக்க மேலதிக பேருந்துகளும் ரயில்களும் சேவையில்!

​தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ​இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) பிரதிப் பொது முகாமையாளர் டி. எச். ஆர். டி. சந்திரசிறி இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ​கொழும்பு புறக்கோட்டை, போதிராஜா மாவத்தை பஸ் நிலையத்திலிருந்து இன்று (அக்டோபர் 18) ஹட்டன், பதுளை, நுவரெலியா, மாஸ்கெலியா, நானு...

மது பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தீபாவளி தினத்தன்று பல மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, வட மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அமைப்புக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்  நாளை பணிப்புறக்கணிப்பு!

தீபாவளியை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாளை (02) மீண்டும் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படும் எனத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. எனினும், பணிப்புறக்கணிப்பு இன்று (01) இடம்பெறாது என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு நடைமுறைகளை முறைப்படுத்துதல், வேதனம் முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு...

அயோத்தி இராமர் கோயிலில் 28 இலட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை…!

தீபாவளியை முன்னிட்டு அயோத்தி இராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 இலட்சம் விளக்குகளால் நேற்று (30) அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது. மேலும், சரயு நதிக்கரையில் 1,100 பேர் ஆரத்தியும் எடுத்துள்ளனர். இராமர் வனவாசத்தை முடித்து விட்டு அயோத்தி திரும்புவதை , தீபாவளியாகவும், தீப உற்சவமாகவும் வட இந்தியாவில் 5 நாள் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில்...

தீபாவளியை ஒட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தம்…..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் இரவு 10 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய இறுதிக்குள் திருப்திகரமான தீர்மானம் வழங்கப்படாவிட்டால் நாளைய...

கிளிநொச்சியில் சௌபாக்கியா உற்பத்தி கிராம சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி ஆரம்பமாகியது!

தீபாவளி தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்டத்தின்  சௌபாக்கியா உற்பத்தி கிராம சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி இன்று(30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்ளூர்உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா உற்பத்தி கிராம  வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட  சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி பசுமை பூங்கா வளாகத்தில் இன்றைய தினம்  இடம்பெறுகிறது. கிளிநொச்சி மாவட்டச் செயலக...

ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருளுடன் நால்வர் கைது!

ஹட்டன் பொலிஸ் பிரிவில் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் இன்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுகளுக்கிடைப்பட்ட நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் தொழில்புரிந்த இவர்கள், தீபாவளி பண்டிகைக்காக தமது ஊர் பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதன்போது ஐஸ்,...

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை; வெளியான அறிவிப்பு!

ஒக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி விடுமுறையைத் தொடர்ந்து மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து அரச தமிழ் வழிப் பாடசாலைகளும் நவம்பர் 01ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும். எவ்வாறாயினும், இந்த மேலதிக விடுமுறையை உள்ளடக்கும் வகையில் இந்த பாடசாலைகள் நவம்பர் 09 ஆம் திகதி (சனிக்கிழமை) இயங்கும் என வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி எப்போது?அக்டோபர் 31 அல்லது நவம்பர் 1? – விரிவான விளக்கம்..!

தீபாவளி உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபத் திருநாளாகும். இருளின் மீது ஒளியின் வெற்றியையும் தீமையின் மீது நன்மையின் வெற்றியையும் திருவிழா குறிக்கிறது. 2024 ஆம் ஆண்டில், அமாவாசை திதியின் காரணமாக தீபாவளி அக்டோபர் 31 இல் வருகிறதா அல்லது நவம்பர் 1 ஆம் திகதி வருமா என்பதில் பலர் குழப்பமடைந்துள்ளனர். அந்தவகையில் இப்பதிவில் தீபாவளியின் முக்கியத்துவத்தையும் அதன்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img