Wednesday, July 22, 2026
No menu items!

தீ விபத்து

வங்கியொன்றில் திடீர் தீ விபத்து..!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள வங்கியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை (18/04/2025) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் செய்த சமையலால் தீப்பிடித்த படகு – 50 பேர் பலி..!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் ஆறுகளில் படகு போக்குவரத்து மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வடமேற்கு கொங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகு புறப்பட்டது. அந்தப் படகில் சுமார் 400 பேர் பயணம் செய்தனர். பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது,...

தீ பற்றி எரிந்த வீடு – அவதிப்பட்ட குடும்பத்தினர்..!

மொரட்டுவை, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (11/04/2025) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பாளர்களால் வீட்டினுள் எற்றப்பட்டிருந்த விளக்கு கவிழ்ந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்த போதும், தீ விபத்தால் வீடு கடுமையாக சேதமடைந்துள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திடீரென தீ பற்றிய பிரபலமான நிகழ்வு மண்டபம்..!

ராஜகிரிய பகுதியில் உள்ள பிரபலமான நிகழ்வு மண்டப வளாகமான தப்ரோபெனில் இன்று (06) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிரபல அழகுக்கலை நிபுணர் சண்டிமல் ஜெயசிங்க ஏற்பாடு செய்திருந்த ‘சி.ஜே. ரோயல் புத்தாண்டு ஈவ் 2025’ நிகழ்வின் போது தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், நிகழ்வில் பங்கேற்றிருந்த மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...

மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனையில் அமைந்துள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்துச் சம்பவம் வெள்ளிக்கிழமை (3/28/2025) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தீயை கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் மட்டக்களப்பு தீ அணைக்கும் படை, பிரதேச சமூக மட்ட அமைப்பினர், பிரதேச...

திடீரென தீப்பற்றி எரிந்த கார்..! 

கிளிநொச்சி உருத்திரபுரம் பொறிக்கடவை வீதியில் நேற்றிரவு எட்டு மணியளவில் திடீரென கார் தீப்பற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த காரினை பெண்ணொருவரே செலுத்தி வந்த நிலையில் குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீ விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக கார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீப்பிடித்து எரிந்த நெடுநாள் மீன்பிடி படகுகள்..!

திக்வெல்ல - நில்வெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் நங்கூரமிட்டிருந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் இன்று (3/17/2025) அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளன. தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதுடன், திக்வெல்ல பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நெடுநாள் படகுகளின் உரிமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், தீ பரவல் தொடர்பாக எவர் மீதும் சந்தேகம் இல்லை...

சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகில் தீ விபத்து!

புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.   <!-- -->  

ஹட்டன் பகுதியில் லைன் வீட்டில் தீ விபத்து!

ஹட்டன், ஷானன் வட்டா பகுதியில் உள்ள ஒரு லைன் வீட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் டிக் ஓயா மற்றும் நாவலப்பிட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ 24 லைன் வீடுகளுக்கு பரவி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது, அதே நேரத்தில் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், காவல்துறையினர், ஹட்டன்...

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!

கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்டையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 62 வயதுடைய ஒரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, அதே நேரத்தில் தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img