Wednesday, July 22, 2026
No menu items!

தீ விபத்து

மூன்று மாடி ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து !

தெஹிவளை, திவுல்பிட்டிய, பிபிலியானையில் உள்ள மூன்று மாடி ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெஹிவளை கல்கிசை நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிற்சாலையில் யாரும் இல்லாததால், பின்புறத்தில் தொடங்கிய தீ, முன் மற்றும் மேல் தளங்களுக்கு...

இந்த ஆண்டில் 9 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவு!

இந்த ஆண்டில் இதுவரை 9 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் 4 தீ விபத்துகளும், இரத்தினபுரியில் 2 தீ விபத்துகளும், மாத்தளை, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஒரு தீ விபத்தும் பதிவாகியுள்ளன. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, மொனராகலை மற்றும் கேகாலை மாவட்டங்கள் அடிக்கடி தீ...

கிரிஷ் கட்டிட தீ விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது..!

கொழும்பின் மிக உயரமான கட்டிடமான 'க்ரிஷ்' கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் துறை முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த தீ விபத்துகளுக்கு பாதுகாப்பற்ற எரிவாயு கட்டர்களைப் பயன்படுத்தியதே காரணம் என்று கூறப்படுகிறது. ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகளின்படி, கட்டிடத்திற்குள் இருந்த இரும்பு கட்டமைப்புகளை அகற்ற எரிவாயு கட்டர்கள் பயன்படுத்தப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். மேலும்...

கிரிஷ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் வெளியானது..!

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் துறை தற்போது முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ‘கிரிஷ்’ கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட காரணமான பல காரணிகள் தற்போது வெளியாகியுள்ளன. கட்டிடத்தின் இரும்பு பாகங்களை பாதுகாப்பற்ற முறையில் எரிவாயு கட்டர் மூலம் வெட்டியதே தீ விபத்துக்கான முக்கிய காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீண்டும் இரும்பை...

பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து; 17 மாணவர்கள்  உயிரிழப்பு!

வட நைஜீரியாவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக பல மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். விடுதியில் சுமார் 100 மாணவர்கள் தங்கியிருந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் 10 முதல் 16 வயதுடைய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முற்றாக தீக்கிரையாகிய சதோச நிலையம்!

பண்டாரவளை , தர்ம விஜய மாவத்தையின் பழைய வணிக வளாகத்தில் அமைந்துள்ள சதோச வணிக மையத்தில் இன்று (20) அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தினால் சதோச நிலையம் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்தனர். இதன்போது பண்டாரவளை காவல்துறையினர் மற்றும் நகர சபையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியதுடன் , தீ ஏனைய...

முற்றாக எரிந்து நாசமாகியுள்ள தொடர் குடியிருப்புக்கள்..!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாகலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 12 வீடுகள் கொண்ட குடியிருப்பில்  பரவிக்கொண்டிருந்த தீயை, தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர். தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை....

திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்த வீடு..!

வாத்துவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ மளமளவென பரவியதையடுத்து, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சேர்ந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். எனினும் இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த வீட்டின் பெண் ஒருவர் விளக்கை ஏற்றி விட்டுச் சென்றதால், அது...

மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தீப்பற்றியுள்ளது!

குடுவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21) காலை 7.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மற்ற மீன்பிடி படகுகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த...

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து…!

கொழும்பு, புறக்கோட்டை, மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை (05.10) இடம்பெற்றுள்ளதோடு,  அருகில் இருந்த மேலும்  இரண்டு வீடுகளில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு இரண்டு மாநகர சபையின் தீயணைப்பு படையினரால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img