Friday, July 24, 2026
No menu items!

துப்பாக்கிச் சூடு

காட்டு யானைகள் பாதுகாப்பு: புதிய சட்டங்களை உருவாக்குவதில் அரசாங்கம் முயற்சி !

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் நேற்று (15.07) மதியம் சுற்றாடல் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி மற்றும் பிரதி அமைச்சர் என்டன் ஜயக்கொடி ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது தற்போதைய அரசாங்கம் யானை வேட்டையாடுதல்...

தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு!

வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று  அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த  அடையாளம்  தெரியாத  இருவரினால்  இந்த துப்பாக்கிச்  சூடு  மேற்கொள்ளப்பட்டது. குறித்த...

மாலமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்!

ஹிரண காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மாலமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று (11) அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத ஒருவராலே இத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32...

கொஸ்கமவில் துப்பாக்கிச் சூடு: 12 வயது சிறுமி உட்பட மூவர் காயம்!

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் நேற்று (6) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பிஸ்டல் வகை ஆயுதத்தைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ​​பாதிக்கப்பட்டவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.   காயமடைந்தவர்களில் அவிசாவளையைச் சேர்ந்த 30...

உதவிக்காக காத்திருந்த மக்களும் இப்போது இலக்காகின்றனர்: காசா மீதான தாக்குதலில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரிப்பு!

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில், உதவிக்காக காத்திருந்த பலர் உயிரிழக்கின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்காலிக உதவி முகாம்கள் மற்றும் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களில், அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் நேரடி துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சுக்களில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இன்று மட்டுமே குறைந்தது 27 பேர்  உயிரிழந்துள்ளனர் என...

கந்தானையில் துப்பாக்கிச் சூடு: இருவர் காயம்!

கந்தானையில் இன்று (30) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் தற்போது ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கஹவத்தவையில் துப்பாக்கிச் சூடு: 22 வயது இளைஞர் கொலை, ஒருவருக்கு படுகாயம்!

கஹவத்தவின் யைன்னா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார் என்று  பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு யாயின்னாவின் கோஸ்கெல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடையாளம் தெரியாத  4 நபர்கள் வந்து இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு...

மித்தெனிய துப்பாக்கிச் சூடு: 2 இளைஞர்கள் பலி !

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதுடன், தற்போது மூன்று விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

பொரளை வனாதமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு – இலக்கு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்!

கொழும்பு பொரளை, வனாதமுல்ல பகுதியில் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில், ஒருவரை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 5.45 மணியளவில், தும்பேகாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளி பகுதியில் நடைபெற்றது. குறிவைக்கப்பட்ட...

மௌனமான அதிகாலையில் துப்பாக்கியின் சத்தம் – காலியில் பரபரப்பு!

காலி - அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வெவேகொடவத்தை பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெவேகொடவத்தை பகுதியில் உள்ள வீட்டொன்றை இலக்காகக் கொண்டு இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை எனவும், இதுபற்றி...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img