Saturday, July 25, 2026
No menu items!

துப்பாக்கிச் சூட்டு

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; கைது செய்யப்பட்ட மூவருடன் வெளிநாட்டு நாய் மீட்பு!

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விசாரணைக்காக கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழு கொழும்புக்கு அழைத்து சென்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மூவரும் கைது செய்யப்படும் போது, காரினுள் அவர்களின் ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில், இலட்ச ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு இன வளர்ப்பு...

மினுவங்கொடவில் துப்பாக்கிச் சூடு!

மினுவங்கொட, பத்தடுவன பகுதியில் இன்று (13) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். மினுவங்கொட பகுதியில் 'பஸ் திலீப' என்ற நபரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார்...

மஹரகம நாவின்னவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்!

மஹரகம, நாவின்ன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 13 யானைகள் சிகிச்சையில் – வனஜீவராசிகள் திணைக்களம் தகவல்!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 13 யானைகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 'பாத்திய' என்றழைக்கப்படும் யானை உயிரிழந்ததை அடுத்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வனவிலங்கு சுகாதார பணிப்பாளர் தாரக பிரசாத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, அனுராதபுரத்தில் 7 யானைகளும், பொலன்னறுவையில்...

கந்தானையில் துப்பாக்கிச் சூடு: இருவர் காயம்!

கந்தானையில் இன்று (30) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் தற்போது ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் துப்பாக்கிச் சூடு!

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய மற்றுமொருவர் பலி!

மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுவனும் இன்று காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வீரகெட்டிய மீகஸ்ஆர பகுதியைச் சேர்ந்த அருண விதானகமகே அல்லது 'கஜ்ஜா' மற்றும் அவரது 6 வயது மகள் நேற்று நடந்த துப்பாக்கிச்...

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அச்சாறு போன்று காணப்படுகிறது; நாமல் ராஜபக்ஷ!

நாட்டின் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்குக் குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் எங்கும் சுதந்திரமாகப் பயணிக்க முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்தது. இவ்வாறு அரசாங்கம் குறிப்பிட்டு ஓரிரு நாட்களில் கொலைச் சம்பவங்களே அரங்கேறியுள்ளன என நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்தை சுட்டிக்காட்டி நாமல்...

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி…!

கொழும்பு கிராண்ட்பாஸ், வடுல்லவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று (26.07) அதிகாலை உயிரிழந்துள்ளார். நேற்று (25) மாலை பெண் ஒருவர் உட்பட இருவர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, 32 வயதான கே. ஜி. ஆர். தர்ஷன என்ற நபர் நேற்று...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img