Saturday, April 25, 2026
No menu items!

துப்பாக்கி

பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட ரயில் பயணிகள் மீட்பு!

பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 346 ரயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட ரயில் முந்தைய நாள் மதியம் பலுசிஸ்தான் மாகாணத்தில் 400 பயணிகளுடன் கடத்தப்பட்டது. பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. கடத்தலை நடத்திய பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள், அரசியல் கைதிகள் குழுவை 48 மணி நேரத்திற்குள் விடுவிக்காவிட்டால், பயணிகளுடன் ரயிலை வெடிக்கச் செய்வோம்...

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது..!

இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் துப்பாக்கி மற்றும் நான்கு தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் வெலிக்கடை பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (07/03/2025) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 15, முத்துவெல்ல மாவத்தை பகுதியில் வசிக்கும்  22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை...

துப்பாக்கி பிரயோகத்தால் மூவர் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் அடையாளந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான 02 பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னனி என்ன?

துபாயில் தலைமறைவாக உள்ள கெஹெல்பத்தர பத்மே என்ற நபரின் அறிவுறுத்தலின் பேரில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்காக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர் கடல்வழியாகத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபர் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தி இந்தக்...

காலியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

காலி, உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகிரல பிரதேசத்தில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் ஞாயிற்றுக்கிழமை (16) கைதுசெய்யப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர். உரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொடகிரல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து,...

துப்பாக்கியுடன் மாயமான பொலிஸ் கான்ஸ்டபிள்..!

கல்கிசை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அவரது T56 துப்பாக்கியுடன் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த கான்ஸ்டபிள் துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகளையும் ஒப்படைத்த யோஷித..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகளையும் ஒப்படைத்துள்ளாதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்புக்காக உரிமங்களுடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், மறுஆய்வுக்குப் பிறகு மீண்டும் வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு சமீபத்தில் அறிவித்தது. இந்த உத்தரவின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன்...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவர் கைது!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நாஉல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வராகொல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாஉல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (30) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்  போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 54 வயதுடைய கோன்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யோஷிதவிடம் இருந்த ஏழு துப்பாக்கிகள் – அரசின் அதிரடி நடவடிக்கை..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிடம் இருந்த ஏழு துப்பாக்கிகளில் ஐந்து தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கொந்தா தெரிவித்துள்ளார். நேற்று (29/1/2025) பொதுப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன துப்பாக்கிகள் மீட்பு!

நாட்டின் பிரதான இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன 73 துப்பாக்கிகளில், 38 துப்பாக்கிகள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவ முகாமில் உள்ள துப்பாக்கிகள் பாதாள உலக குழு உறுப்பினர்களிடம் இருக்கின்றன. 38 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. 35 துப்பாக்கிகள் பாதாள உலக குழு உறுப்பினர்களிடம்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img