வீதியோரங்களில் யாசகம் பெற்றதோடு, சிறு பொருட்கள் விற்பனை செய்துவந்த 21 சிறுவர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சிறுவர்களுக்கு தற்போது தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சமீப காலமாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இணைந்து, வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள சிறுவர்களை கண்டறிந்து, அவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கை கொழும்பு, நுகேகொடை, கம்பஹா, பாணந்துறை, களனி, நீர் கொழும்பு, கல்கிஸ்ஸை, களுத்துறை, தங்காலை, அனுராதபுரம், கண்டி, குருநாகல், சிலாபம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சமூக நலனுக்கும், சிறுவர்களின் எதிர்காலத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here