Saturday, November 21, 2026
No menu items!

தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகலுடன் நிறைவடையவுள்ள நிலையில், தேசியப் பட்டியல் வேட்பாளர்களை சமர்ப்பிக்கும் கட்சிகளுக்கான வழிகாட்டுதல்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 99A உறுப்புரையின் கீழ், தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தில் தகுதியான தேசிய...

தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிப்பு!

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30ஆம் திகதி மற்றும் நவம்பர் 01ஆம் மற்றும் 04ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் தேர்தல் அலுவலகங்களிலும் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தேதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு நவம்பர் 7 மற்றும் 8...

கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள122 சுயேட்சைக் குழுக்கள்..!

2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்காக 122 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் மாத்திரம் 36 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. குறித்த இரண்டு மாவட்டங்களிலும், 15 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை...

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்…!

பாராளுமன்றத் தேர்தல்  முடிவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமான தீர்மானத்தை அறிவிப்போம் என  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு சட்ட நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக முக்கியஸ்தர்களுடன் ஆரம்பக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. "நாங்கள் தேவையான அடிப்படை...

தேர்தல்கள் ஆணைக்குழுக்கும் சிறிலங்கா காவல்துறைஅதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு!

சிறிலங்கா காவல்துறை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. இந்த விவாதத்தின் போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத் தேர்தலுக்கான ஒட்டுமொத்த பாதுகாப்புத் திட்டம், வேட்பாளர்...

அஞ்சல் வாக்கு பாதுகாப்பு பொதியைக் கையாளும் முறைமை தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அஞ்சல் திணைக்களத்திற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அஞ்சல் வாக்கு பாதுகாப்பு பொதியைக் கையாளும் முறைமை, மற்றும் அதற்குரிய காலப்பகுதி என்பன இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது. அத்துடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை, வாக்காளர்களின் வீடுகளுக்கு விநியோகிக்கும் வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல...

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பணிகள் எதிர்வரும் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்த அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீண்டும் விண்ணப்பங்களை...

அனுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு!

பெரும்போகத்தின் போது, விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் கொடுப்பனவும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க...

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்…!

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி ஆணையர்கள், துணைத் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் இன்று (28.09) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் உறுப்பினர் எம்.ஏ.பீ.சீ. பெரேரா தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பான அடிப்படை விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பெரேரா தெரிவித்தார். அன்றைய தினம் அனைத்து உறுப்பினர்களும் கூடி நாடாளுமன்ற தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள்...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு இடையூறின்றி பொதுத் தேர்தல் நடைபெறும்!

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்குக் குறுகிய காலப்பகுதியே காணப்பட்டாலும் அதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (26.09.2024) ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நாடாளுமன்றத் தேர்தலை...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img