Friday, November 20, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

NPP அரசாங்கத்தின் பொதுக் கணக்குகள் குழு கூட்டத்தின் திகதி அறிவிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொதுக் கணக்குகள் குழுவின் முதல் கூட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறும். கோபா குழு, நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் கூடும். இந்தக் கூட்டத்திற்கு கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைகள் மீதான விவாதங்களும் அன்றைய தினம் நடைபெறும் என்று பொதுக் கணக்குகள்...

இளங்குமரன் எம்.பியை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்..!

விபத்தில் சிக்கிக் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் உடல் நிலை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார். யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பயணித்த வாகனம்...

அர்ச்சுனா எம்.பியால் தாக்குதலுக்குள்ளானவரின் அதிரடி முடிவு..!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சினை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (11/02/2025) இரவு நாடாளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட...

எம்.பி. சாணக்கியனுக்கு ஒதுக்கிய நிதியில் மோசடி – அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா?

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியன் ரூபா நிதியில் குளத்தை விளையாட்டு மைதானம் எனவும் பதிவு செய்யப்படாத பல இடங்களுக்கு நிதி ஓதுக்கப்பட்டு நிர்மாணப்பணி முடியாமல் முடிவுற்றதாக பணம் பெறப்பட்டு பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. எனவே இதற்கு விசாரணைக்குழு ஒன்றை  நியமித்து இதில் தவறிழைத்த அரச அதிகாரிகள் அத்தனை பேரையும் பணிநீக்கம்...

நாமல் ராஜபக்ஷ தொடர்பில் விசாரணை; CID!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டப் பட்டம் எவ்வாறு பெற்றார் என்பது குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) உத்தரவிடப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். நாமல் ராஜபக்ஷ சட்டத் தேர்வை முடித்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பல புகார்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய MP.இராமநாதன்  அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்  அர்ச்சுனாவால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை இடுவதன் மூலம் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். குறித்த பதிவில், “என் வாழ்க்கையில் யாருடனும் வம்பு சண்டைக்கு போனதில்லை. துஷ்டனை கண்டால் தூர விலகு என்று என் தந்தை தெளிவாக சொல்லி தந்திருக்கிறார். கடந்த சம்பவம்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காதது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக தனது பதவி...

SJB-UNP இடையிலான பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்!

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட தேர்தலை இலக்காகக் கொண்டு ஒன்றிணைந்து செயற்படுவதற்காகக் குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே பல சுற்றுக் கலந்துரையாடல்கள் நடைபெற்று வந்தன. இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக இரு கட்சிகளினதும் சார்பில் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன. எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைக்காக நியமிக்கப்படாத தரப்பினரும்...

MP கஜேந்திரகுமாருக்கு நீதிமன்றம் அழைப்பானை!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாளை (14) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி திஸ்ஸ விஹாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு , போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த...

இராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டலொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் தாக்குதலுக்கு இலக்கான நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியர் அர்ச்சுனா பீங்கானால் நபரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட காணொளியும் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (11) இரவு அர்ச்சுனாவுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img