Tuesday, August 4, 2026
No menu items!

நாடாளுமன்ற வேட்பாளர்

’எங்கள் நோக்கம் மக்களுக்கு சேவை செய்யும் அரசியலை மீண்டும் கொண்டு வருவதேயாகும்’; திலித் ஜயவீர

'சர்வஜன பலய' கூட்டணியின் தலைவரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர, இலங்கையின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் நோக்கில் ஜனரஞ்சக அரசியல் இயக்கத்தை ஸ்தாபிப்பதற்கான தனது கட்சியின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். கம்பஹாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெயவீர, விழுமியங்கள் மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையில் மக்களை மையமாகக் கொண்ட ஆட்சி அணுகுமுறையை வளர்ப்பதற்கான...

தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள அனைவரும் ஒன்றினைய வேண்டும்; வடிவேல் சுரேஷ்!

பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அனைவரும் கைக்கோர்க்க வேண்டுமென ஐக்கிய ஜனநாயக குரலின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். பசறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற சதித்திட்டங்களை ஒற்றுமையால் முறியடிக்க வேண்டுமென அவர் மேலும்...

நுவரெலியா மாவட்டத்தில் 5 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும்;  இராதாகிருஸ்ணன்!

நுவரெலியா மாவட்டத்தில் 5 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்று(15.10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் கடந்த காலங்களில் மக்களைக் கவனத்தில் கொள்ளாத பலர் தற்போது மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்றுக்...

கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும்; பாரத் அருள்சாமி!

கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்வதற்கு சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன; சாணக்கியன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்வதற்கு சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக அதன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (13) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 6 பேர் காணாமல் போயுள்ளனர்

கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 2,331 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்...
- Advertisement -spot_img