Sunday, September 27, 2026
No menu items!

நானுஓயா

810.000 ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க நகைகள் வீடுடைத்து திருட்டு!!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810.000 ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க நகையும், பணத்தினையும் திருடிய நபரை நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் நேற்று (24) உத்தரவிட்டார். வீட்டில் உள்ளவர்கள் கடந்த (16) திகதி வெள்ளிக்கிழமை வெளியில் சென்றிருந்த நிலையில் வீடுடைத்து இந்தத் திருட்டுச் சம்பவம்...

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும் தொடருந்து சேவையினூடாக அதிகளவு வருமானம்!

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ தொடருந்து சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் கொழும்பை வந்தடைவதற்காக நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனத் தொடருந்து...

தடம் புரண்ட எல்ல ஒடிஸி ரயில்..!

நானுஓயாவிலிருந்து  பதுளை நோக்கிப் பயணிக்க இருந்த எல்ல ஒடிஸி ரயில் நானுஓயாவில் இன்று சனிக்கிழமை (4/5/2025) தடம் புரண்டுள்ளது. குறித்த ரயில் இன்று காலை 08:10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இருந்த நிலையில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளது. குறித்த ரயிலில் பதுளை நோக்கிப் பயணம் மேற்கொள்வதற்காக வருகை தந்திருந்த பயணிகள் பாரிய சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர். எவ்வாராயினும்...

நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்ட ரயில்..!

நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலொன்று நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக குறித்த மார்க்கத்தின் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, தற்போது ரயிலின் தடம்புரள்வை சரிசெய்யும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக...

வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து!

நுவரெலியாவிலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு இரண்டு வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (20) காலை 8 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில்...

நானுஓயா பொலிஸ் நிலையத்தில் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் திறப்பு!

நானுஓயா பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (20) காலை மகளிர் மற்றும் சிறுவர் - துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் ,உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தில் தனியான அறை ஒன்று ஒதுக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.என் ஏகநாயக்க மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக...

தேசிய மக்கள் சக்தி வரலாற்று சாதனை படைத்துள்ளதை முன்னிட்டு நானுஓயாவில் பாற்சோறு வழங்கி வெற்றிக் கொண்டாட்டம்…

இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளதை முன்னிட்டு நானுஓயா கிரிமிட்டி பகுதியில் அமைதியான முறையில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. சனிக்கிழமை (16.11.2024) மாலை நானுஓயா டெஸ்போட் கிரிமிட்டி ஆலயத்துக்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு பாற்சோறும் இனிப்புப் பண்டங்களும் வழங்கினர். இதன்போது தேசிய...

ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து;இருவர் காயம்!

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். நானுஓயா - கிலாரண்டன் பகுதியில் நேற்று (29.10) இரவு இந்த விபத்து நேர்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    

முச்சக்கரவண்டி மீது விழுந்த மரம்..!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்திற்கு செல்லும் வீதியில் நேற்று இரவு (05) முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததில் விபத்து இடம்பெற்றுள்ளது. சிறுவன் ஒருவன் காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். வீதியோரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மரம் ஒன்றினை சட்ட விரோதமாக வெற்றி கொண்டிருந்த வேளையில் திடீரென மரம் வீதியில்...
- Advertisement -spot_img

Latest News

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில்...
- Advertisement -spot_img