நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நானுஓயா – கிலாரண்டன் பகுதியில் நேற்று (29.10) இரவு இந்த விபத்து நேர்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








