Saturday, April 18, 2026
No menu items!

நா.வேதநாயகன்

மக்களை அலைக்கழிக்கும் அரச நிறுவனங்கள் – சுட்டிக்காட்டிய ஆளுநர்…!

மக்களுக்கு சேவை செய்வதற்கே அரசாங்க நிறுவனங்கள் இருக்கின்றனவே தவிர மக்களை அலைக்கழிப்பதற்கு அல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரி சங்கத்தால் 4ஆவது ஆண்டாகவும் நடத்தப்பட்ட சதுரங்கச் சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (26.05.2025) பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில்...

அலுவலர்களின் ஒழுக்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் – அறிவுறுத்திய ஆளுநர்..!

திணைக்களத் தலைவர்கள், அலுவலர்களின் ஒழுக்கம் - கட்டுப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் இடையிலான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (21.05.2025) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலிம் போதே வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...

வடக்கு மாகாண ஆளுநரிற்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு..!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (19.05.2025) மு.ப. 10 மணியளவில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது யாழ். மாவட்டத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பிலும், வடக்குக்கான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நூலகத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் யாழ். நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம் – ஆளுநர்!

நூலகம் ஒன்று எவ்வளவு தூரத்துக்கு முக்கியமானது என்பதை நாங்கள் யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இன்று உங்கள் பாடசாலைக்கு நன்கொடையாக அமைத்து வழங்கப்பட்டுள்ள நூலகத்தை உரிய வகையில் பயன்படுத்தி உங்கள் கிராமத்துக்கும் - சமூகத்துக்கும் நற்பெயரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தார் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள். தம்பாட்டி அரசினர்...

நாம் இடம்பெயராமல் இருந்திருந்தால் இன்று எங்கேயோ முன்னேறிச் சென்றிருப்போம் – ஆளுநர் வேதநாயகன்!

நாங்கள் இந்தப் பகுதிகளை விட்டு இடம்பெயராமல் இருந்திருந்தால் இன்று நாம் எங்கேயோ முன்னேறிச் சென்றிருப்போம். அதைக் கற்பனை செய்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இடப்பெயர்வின் வலி உங்களைப்போல எனக்கும் நன்றாகவே தெரியும். நானும் உங்களைப்போன்று இடம்பெயர்ந்து சென்ற ஒருவன்தான் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய...

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் – ஆளுநர் வேதநாயகன்!

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும். தனியார் துறையினர் இலாபத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டே செயற்படுவர். ஆனால் கூட்டுறவுத்துறை சேவையை அடிப்படையாகக் கொண்டு சிறியதொரு இலாபத்துடன் மாத்திரமே செயற்படும். அதனாலேயே, கூட்டுறவுத்துறையை வலுப்படுத்துவதன் ஊடாக அரிசி மாபியாவை எதிர்காலத்திலாவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இளம்...

நெய்தல் சூழல் நேய பூங்கா திறந்து வைப்பு..!

மண்டைதீவில் அமைக்கப்பட்டுள்ள 'நெய்தல் சூழல்நேய பூங்கா' வெள்ளிக்கிழமை (09.05.2025) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டச் செயலராக நான் பணியாற்றிய காலத்தில் இந்தப் பகுதியில் சுற்றுலாத்துறைக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. துரதிஷ்டவசமாக அப்போதிருந்த பிரதேச சபை நிர்வாகம் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை. பல முதலீட்டாளர்கள் முதலிடுவதற்காக வருகின்றபோதும்...

யாழில் விவசாய அமைப்புக்களை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்..!

யாழ். மாவட்டத்தில் விவசாய அமைப்புக்களை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (09.05.2025) இடம்பெற்றது. அரச சார்பற்ற நிறுவனமான 'அவங்க லங்கா' விவசாய அமைப்புக்களை வலுப்படுத்தும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. அதன் நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவே ஆளுநர் தலைமையில் இன்றைய தினம் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த...

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு யாழில் அஞ்சலி..!

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 22.04.2025 அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (30.04.2025) யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பங்கேற்றார். கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்திய ஆளுநர், தனது...

பலாலி வீதி ஊடாக தனியார் பேருந்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்..!

10.04.2025 அன்று பலாலி வீதி திறக்கப்பட்ட நிலையில், அதன் ஊடாக தனியார் பேருந்துச் சேவையை நடத்துவது தொடர்பில், 764 மற்றும் 769 வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் சங்கங்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (30.04.2025) இடம்பெற்றது. 764 வழித்தட பேருந்துச் சேவையை பலாலி வீதியூடாக காங்கேசன்துறை சந்தி...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img