நிதி மோசடி, நிதி குற்றங்கள் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு ஆகியவற்றை தடுக்க தேவையான கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் மூலோபாய ஆதரவுகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இது தொடர்பாக, நிதிச் செயற்பாட்டுக் குழு (Financial Action Task Force) தலைமையிலான ஒரு உயர்மட்ட இந்தியக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது.

விழிப்புணர்வூட்டல், திறனாக்கல் மற்றும் தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட பன்முக உதவிகளை வழங்கும் நோக்கில் இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, குறித்த குழுவினர் இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட பல்வேறு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்புகளில், இலங்கையின் தற்போதைய நிதிக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் காண்பதுடன், அவற்றைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆழமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் நிதி அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ X (முந்தைய Twitter) தளத்தில் வெளியிட்ட பதிவில்,

“நிதிக் குற்றங்களை எதிர்க்கும் இலங்கையின் முயற்சிகளை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதுடன், பிராந்தியத்திலுள்ள நிதி பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உயர்த்துவதற்கும் வழிவகுக்கும் எனக் கணிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here