Thursday, July 23, 2026
No menu items!

நீதவான்

ஹாலிஎல பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!

ஹாலிஎல - அட்டாம்பிட்டிய வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை சோதனைக்குட்படுத்தியபோது அவரிடம் இருந்து 5500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக  ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய நேற்று புதன்கிழமை (16) இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாலிஎல, துனுவங்கிய, சமகிபுர பகுதியில் வசிக்கும் இந்த சந்தேக...

தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் தங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு...

மாரவில நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஒருவர் பணிநீக்கம்!

மாரவில நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீதித்துறை சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த இடைநீக்கம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நீதவான் தொடர்பாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

அனுராதபுரம் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்; சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று (24.03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபரை அடையாளங் காண்பதற்கான அணிவகுப்பு இரண்டாவது நாளாக இன்றைய தினமும்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

மொரட்டுவை பொலிஸ் பிரிவின் தந்தேனியவத்த  பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16/03/2025) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய  கட்டுபெத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இந்த கைது நடவடிக்கையின் போது  05 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை...

கிரிஷ் கட்டட விசாரணைகள் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு..!

கிரிஷ் கட்டட விசாரணைகள் நிறைவுற்றதா என்பது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று காவல்துறை நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டை கிரிஷ் ட்ரான்வர்ட் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் குத்தகைக்கு வழங்கிய போது 70 மில்லியன் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிதி மோசடி தொடர்பில் முன்னாள்...

பாரிய வன்முறை கும்பலின் தலைவருக்கு சிறைத்தண்டனை..!

யாழ்ப்பாணத்தில் பாரிய வன்முறை குற்றங்களில் ஈடுபட்டுவரும் கும்பலொன்றின் தலைவர் என கூறப்படும் நபருக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. யாழில் வன்முறையில் ஈடுபட்டுவந்த கும்பலொன்றின் தலைவர் என கூறப்படும் நபரை வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த சந்தேக நபர் 2022ஆம் ஆண்டு உரும்பிராய் பகுதியில் மறைந்திருப்பதாக...

13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை – நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13  மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நான்கு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க  நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் (24/12/2024) ஆம் திகதி 24.12.2024 செவ்வாய்க்கிழமை  அதிகாலை தலை...

பிரமிட் திட்டத்தில் பண மோசடி செய்த இருவருக்கு விளக்கமறியல்!

குருநாகல் பகுதியில் சட்டவிரோத பிரமிட் திட்டத்தை முன்னெடுத்து வைப்பாளர்களின் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இதற்கமைய குறித்த இருவரையும் எதிர்வரும் 13...

யோசித ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில்!

நிதிமோசடி குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளார். பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ பின்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img