நிதிமோசடி குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளார்.

பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார்

கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ பின்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

சுமார் 4 மணித்தியால வாக்குமூல பதிவின் பின்னர் கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இந்தநிலையில், அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அதன்போது உத்தரவிட்டார்.

இதேவேளை, யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதில் ஜனாதிபதியோ அல்லது பாதுகாப்பு அமைச்சரோ எந்த தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here