ஹாலிஎல – அட்டாம்பிட்டிய வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை சோதனைக்குட்படுத்தியபோது அவரிடம் இருந்து 5500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக  ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய நேற்று புதன்கிழமை (16) இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலிஎல, துனுவங்கிய, சமகிபுர பகுதியில் வசிக்கும் இந்த சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை (17) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here