Friday, November 6, 2026
No menu items!

பங்களாதேஷ்

பங்களாதேஷ் தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிலர்…!

பங்களாதேஷ் பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி நேற்றைய தினம்(05.08) பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை ஆக்கிரமித்து அங்கிருந்த உடைமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர். இந்நிலையில், நியூயோர்க்கில் உள்ள பங்களாதேஷ் தூதரகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படத்தை அகற்றியுள்ளனர்.

பதவி விலகிய பங்களாதேஷ் பிரதமர்..!

பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதையடுத்து  100 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக்...

பங்களாதேஷில் 13 பொலிஸ் உட்பட 76 பேர் பலி…

பங்களாதேஷில் இன்று காலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை, காவல்துறைக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 76 பேர் வரை கொல்லப்பட்டும் மேலும் ஏராளமானோர் காயமடைந்துமுள்ளனர். தெருக்களில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டாக்கா...

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கு தடை..!

பங்களாதேஷில் கடந்த 15-ம் திகதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.  மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையால் 150-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இந்த வன்முறைக்கு காரணமான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் அமைப்பான இஸ்லாமிக் சதாரா ஷிபிர் என்ற அமைப்பை...

பங்களாதேஷில் கண்டதும் சுட உத்தரவு…!

பங்களாதேஷில் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அதனை மீண்டும் அமுல்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்த நிலையில், மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம்...

பங்களாதேஷில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான அறிவித்தல் வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு…!

பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை காரணமாக பங்களாதேஷில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பங்களாதேஷில் 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் கல்வி பயின்று வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பங்களாதேஷில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதாலும் வெளிநாட்டு மாணவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்படாத காரணத்தினால்...

பங்களாதேஷில் அதிகரிக்கும் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்புக்களில் 30 சதவீதம் இட ஒதுக்கீடை வழங்கி வரும் நிலையில், நில ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டத்துக்கு...

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவின் முடிவால் இலங்கைக்கு காத்துள்ள வாய்ப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் முன்மொழியப்பட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபி அட்டவணைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் இறுதிப் போட்டிகள் மற்றும் இந்தியாவின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும். பி.சி.பி.யினால் முன்மொழியப்பட்ட அட்டவணையை எந்த மாற்றமும் செய்யாமல் ஐசிசி மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவைத் தவிர, 2025 சாம்பியன்ஸ் டிராபியில்...

சுப்பர் 8 இல் மேற்கிந்தியதீவுகளின் முதல் வெற்றி..!

நடைபெற்றுவரும் இருபதுக்கிருபது உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற சுப்பர் 8 இன் ஆறாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய...

பங்களாதேஷ் பிரதமரை சந்தித்த ஜனாதிபதி!

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,இன்று சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை (08) நாட்டிலிருந்து புறப்பட்டார். அந்த விஜயத்தின் போது இன்று (10) இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றதாக ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

 உரிமை மீறல் பிரச்சினைகளை நிராகரித்த சபாநாயகர்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பாராளுமன்ற உரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ஐந்து கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே இன்று (06)...
- Advertisement -spot_img