Saturday, April 25, 2026
No menu items!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்து திட்டம்!

கண்டி, கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் இலங்கை போக்குவரத்து சபையும் அறிவித்துள்ளன. திடீர் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்த சூழ்நிலைகளில், பரீட்சார்த்திகள் தங்களின் பரீட்சை நிலையங்களுக்கு இடையூறு இல்லாமல் செல்லுவதற்கு தேவையான...

இன்று ஆரம்பமாகும் 2025ம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை இன்று நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது. 340,525 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பரீட்சார்த்திகளும் தத்தமது பரீட்சை அனுமதி அட்டைகள் மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகளுடன் தங்கள் பரீட்சை நிலையங்களுக்கு முன்கூட்டியே வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்...

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

க.பொ.த (G.C.E. Advanced Level) உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடத்த அனைத்து ஏற்பாடுகளும்...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய தகவல்..!!

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தலைமையில் இன்று (09) காலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கருத்து வௌியிட்ட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. எனினும், அனைத்து மாணவர்களும்...

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது!

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (ஆகஸ்ட் 07) வெளியிடப்பட்டுள்ளன என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி பெறுபேறுகளை இணையத்தளங்கள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலமாக பார்வையிடலாம். இந்த பெறுபேறுகள், 2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு...

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமிப்பு!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு , இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி ஏ.கே.சுபாசினி இந்திகா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சி.ஏ. ஜயசுந்தரவின் சேவைக்காலம் கடந்த 6 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், வெற்றிடமாகவுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.கே.சுபாசினி இந்திகா குமாரி...

சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு ஒரு சிறப்பு நினைவூட்டல்..!

இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். நாளை நடைபெற உள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக இன்று (16) நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்த விண்ணப்பதாரர்களில், 398,182 பள்ளி விண்ணப்பதாரர்களும், 75,968...

சாதாரண தரப் பரீட்சை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு செய்தியாளர் சந்திப்பு..!

நாளை (17) நடைபெறவுள்ள க.பொ.த. (O.L.) தேர்வுக்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்த சிறப்பு செய்தியாளர் சந்திப்பு தற்போது இலங்கைப் பரீட்சைத் துறையில் நடைபெற்று வருகிறது. இதற்குப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திரு. அமித் ஜெயசுந்தர தலைமை தாங்கினார்.

உயிரியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தின் உயிரியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகிறது. 8ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த பரீட்சை 10 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். நாடு முழுவதும் 75 பரீட்சை மையங்களில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளது.  

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண் மீள்திருத்தம் தொடர்பான அறிவிப்பு..!

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை இன்று (27/1/2025) முதல் பெப்ரவரி 6 வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
- Advertisement -spot_img