Saturday, November 21, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர்

யாழில் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் தொழிலற்ற பட்டதாரிகள் போராட்டம்!

வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி தொழிலற்ற பட்டதாரிகள் இன்று (14) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது யாழ். மாவட்ட...

எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பிணை…!

தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்து அகற்ற சமூக வலைத்தளங்களில் துண்டுப்பிரசுரத்தை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில்...

புத்தளத்தில் வாகன விபத்து; ஒருவர் பலி; MP இன் சகோதரன் கைது!

வாகன விபத்து தொடர்பில் தேசிய மக்கள் சக்தி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (14) காலை கொஸ்வத்த, பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு வந்து கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் வந்த...

தாக்குதலில் ஈடுபட்ட MP அர்ச்சுனா!

யாழில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சுனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார். இதன்போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய...

எம்.பி M.S.நளீம் மீது சிலர் தாக்குதல்..!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.S.நளீம் இன்று காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன் வைத்து சிலரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சிறப்பு வைத்தியர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!

சுகாதார சேவையில் 2,800 சிறப்பு வைத்தியர்கள் இருக்க வேண்டியிருந்தாலும், தற்போது 2,000 பேர் மட்டுமே இருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சிறப்பு வைத்தியர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...

அர்ச்சுனா எம்.பியின் கருத்துக்கு முரளிதரன் கடும் எதிர்ப்பு..!

ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது இல்லத்தில் வைத்து நேற்று (2/5/2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தையிட்டியில் காணப்படும் விகாரையை இடிக்க முடியாதென கூறும் அர்ச்சுனா இராமநாதன் பெரிய...

சுஜீவ சேனசிங்கவுக்கு இழப்பீட்டை வழங்குமாறு உத்தரவு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவிற்கு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தின் போது, ​​ஐக்கிய மக்கள்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு மனப் பிரச்சினை; தயாசிறி ஜயசேகர…

சபாநாயகர் எழுத்துமூல கோரிக்கை விடுத்து தன்னை பொலிஸ் காவலில் வைக்குமாறு கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அங்கு அர்ச்சுனா எம்.பி., சபாநாயகரை கடுமையாக சாடினார். அப்போது எழுந்து நின்ற நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாட்டில் ஜாதிப் பிரிவினை இல்லை என்றும், இவ்வாறான நேரத்தில் ஆங்கிலத்தில் பேசி தவறான கருத்தைப்...

நெல்லுக்குரிய நிர்ணய விலை தீர்மானிக்கப்பட வேண்டும் – அடைக்கலநாதன் எம்.பி..!

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று...
- Advertisement -spot_img

Latest News

பன்னிப்பிட்டிய பகுதி இரும்பு கடையொன்றில் தீ விபத்து

பன்னிப்பிட்டிய தெபானாமவில் உள்ள இரும்பு கடை ஒன்றில் இன்று (21) காலை சுமார் 9.05 மணியளவில்  தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
- Advertisement -spot_img