Friday, November 20, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர்

இளங்குமரன் எம்.பிக்கும் வர்த்தக சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு..!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் சாவகச்சேரி நகர வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் (27.12.2024) சாவகச்சேரியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. சாவகச்சேரி நகர சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட கடைத் தொகுதிகள் அண்மையில் குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்க கேள்வி கோரப்பட்டிருந்தது. குறித்த கேள்வி கோரலினால் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும்...

சர்வஜன அதிகாரத்தின் பக்கம் சாய்ந்த எஸ்.எம். சந்திரசேன..!

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (23.12.2024) சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினராக இணைந்து கொண்டார். கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவிடம் இருந்து அவர் கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். சர்வஜன அதிகாரத்தின் தலைமைக் குழுவிற்கும் முன்னாள் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். 2001 முதல் 2024 வரை அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். எஸ்.எம். சந்திரசேன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக மனோ கணேசன் , நிஸாம் காரியப்பர் ,சுஜீவ சேனசிங்க, மொஹம்மட் இஸ்மாயில் முத்து மொஹம்மட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளரால் இந்த பெயர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மன்னாரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்..!

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10.12.2024) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில்...

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப்வண்டி, வென்னப்புவ பகுதியில் பாதசாரி ஒருவரை மோதியதில் பெண் பாதசாரி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (8) பிற்பகல் கொழும்பு புத்தளம் வீதியில் போலவத்தை சந்தியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம்...

2025 வரவு செலவுத் திட்டத்தை ஒதுக்கியுள்ள ஜனாதிபதி அனுர திஸாநாயக்க..!

2024 ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்திற்காக ரணில் ஒதுக்கிய அதே தொகையை ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவும் 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒதுக்கியுள்ளதாக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கத்தின் இடைக்கால நியமக் கணக்கு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே...

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிலிருந்து ஹிருணிகா பிரேமச்சந்திர விடுதலை..!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (04.12.2024) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை...

மாவீரர் நினைவேந்தலிற்கு ஒத்துழைத்த ஜனாதிபதி அனுரவிற்கு நன்றி – செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு..!

மக்களின் மனதில் இருக்கும்  வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து  நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து  முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று (29.11.2024) மாலை ஊடகங்களுக்கு கருத்து...

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்கவும் – ஜனாதிபதிக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்..!

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் காணப்படும் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை மீள  கையளிக்க கோரி  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (26.11.2024) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள முள்ளிக்குளம், தலைமன்னார் பியர் பள்ளிமுனை, வங்காலை...

மன்னார் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தில் 12 ஆயிரத்து 485 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 879 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை (25.11.2024) மாலை வரை குறித்த எண்ணிக்கையுடைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img