முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் நேற்று வியாழக்கிழமை (22.05.2025) மாலை புதர் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பின்னர் குறித்த நபரை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here