Tuesday, June 23, 2026
No menu items!

புலமைப்பரிசில் பரீட்சை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பான மதிப்பாய்வு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் சர்ச்சைக்குரிய முதலாவது வினாத்தாள் தொடர்பான பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பரீட்சை வினாக்களில் பல கேள்விகள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) அறிக்கையொன்று ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், ஆணைக்குழு தனது பரிந்துரைகளை பரீட்சைகள் திணைக்களத்திற்கு...

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடாத்தப்படாது; பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

மூன்று கேள்விகள் கசிந்துள்ள நிலையில், அண்மையில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடாத்தப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கேள்விகளுக்கு அனைத்து மாணவர்களும் முழு மதிப்பெண்களைப் பெறுவார்கள் என்றும், விடைத்தாள்கள் குறித்து மதிப்பெண்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார். தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் மாதம் 323,879...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார். எனினும் புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறாதெனவும் மூன்று வினாக்கள் மாத்திரமே வெளிவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள...

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்த  கோரி பெற்றோர்கள் போராட்டம்!

அண்மையில் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் வெளியானதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையைக் கருத்திற் கொண்டு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்...

தரம் 05 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த தொடர்பில் இறுதி முடிவு!

இந்த ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் உள்ள மூன்று வினாக்களும் முன் கூட்டியே பகிரப்பட்டதால் அவ் மூன்று வினாக்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்குவதற்கு நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சையை மீண்டும் நடத்துவது ஏற்கனவே பரீட்சையை எதிர்கொண்ட பிள்ளைகளின் மனநலத்தைப் பெரிதும்...

அரசியல்வாதிகளை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்கத் தடை…!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானமை தொடர்பில் சுயாதீன விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.  கல்வி அமைச்சின் சகல பிரிவு பிரதானிகளுடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். வினாத்தாள் வெளியானதன் காரணமாக மாணவர்களுக்கு...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வாக்குமூலங்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அவர்களின் மனித உரிமை மீறல்கள்...

பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பான சம்பவத்துடன் மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஏற்கனவே சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதாகக் கூறப்படும் நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர்...

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வெளியிட்ட தொடர்பில் மூவர் பணி நீக்கம்!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னர் வினாத்தாளைக் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகுதிநேர வகுப்பு ஆசிரியர்கள் சிலருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரம் - ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் சேவையாற்றிய பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேரே சேவையிலிருந்து...

பரீட்சைக்கு முன்னர் வினாத்தாள் கசிந்ததன் காரணமாக பெற்றோர்கள் போராட்டம்!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வழங்குவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பரீட்சைக்கு முன்னர் வினாத்தாள் கசிந்ததன் காரணமாக தாள் ஒன்றில் முதல் மூன்று வினாக்களுக்கான புள்ளிகளுக்கு விலக்கு அளித்து பெற்றோர்கள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பரீட்சையை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி இன்று பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக பெற்றோர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img