Tuesday, April 28, 2026
No menu items!

பொலிஸ் பிரிவு

சாவகச்சேரியில் ஜஸ்போதைப்பொருளுடன் எரிபொருள் தாங்கி சாரதி கைது !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சங்குபிட்டி பகுதியல் சாவகச்சேரி பொலிஸார் இன்று மதியம் மேற்கொண்ட வீதிச்சோதனை நடவடிக்கையின் போது ஜஸ்போதைப்பொருளுடன் எரிபொருள் தாங்கி சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துராஐவெல பகுதியில் இருந்து யாழிற்கு எரிபொருள் ஏற்றிவந்த எரிபொருள் தாங்கியினை சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து ஜஸ், கஞ்சா மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைது செய்யப்பட்டு...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பாத பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 3,060 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசேட அதிரடிப்படை ஹொரணை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (6) பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கல்பாத பகுதியைச் சேர்ந்த...

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு – சாரதி தப்பி ஓட்டம்!

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில், சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. புளியம்பொக்கணை சந்திப்பகுதியில் போக்குவரத்து சோதனைக்காக வாகனங்களை நிறுத்திய பொலிசார், குறித்த டிப்பர் வாகனத்தையும் நிறுத்த முயன்றனர். ஆனால், பொலிசாரின் சமிக்ஞையை மீறி வாகனம் முன்னே...

குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (03) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள தொரப்பிட்டி தோட்டத்தில் தேங்காய் பறிக்க அனுமதியின்றி தோட்டத்திற்குள் நுழைந்ததற்காக மேற்கூறிய நபர் காவலாளியால் சுடப்பட்டார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய...

ஆனைக்கோட்டையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த (தம்பையா சிவனேஷ்வரன் (வயது 42) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த மனநலம்...

இணையம் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கைது!

இணையம் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட சீன பிரஜைகள் உட்பட 8 பேரை காலி பொலிஸார் நேற்று (01) கைது செய்துள்ளனர். காலி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுகம பிரதேசத்தில் உள்ள தற்காலிக தங்குமிடத்தை சோதனையிட்ட போது இந்த வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக...

லொறி மோதியதில் பாதசாரி ஒருவர் பலி…!

குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருணாகல் - தம்புள்ளை வீதியில் முத்தெட்டுகல பகுதியில் லொறி மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியில் பயணித்த பாதசாரி மீது குருணாகலிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து...

ஹெரோயின் போதைப்பொருளுடன்  பெண்ணொருவர்  கைது!!!

நேற்று திங்கட்கிழமை (27) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய களனி பாலம், சேதவத்த , வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன்  பெண்ணொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். “வெல்லம்பிட்டிய  குடு ரெஜின“ என்ற பெண்ணே பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இவ்வாறு   கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பொலிஸ் விசேடஅதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ்...

குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் !!!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை (27) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவர் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த வேளை  குளவிக்கூடு கலைந்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். இந்நிலையில் இவர் வைத்தியசாலையில்...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img