பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் திங்கட்கிழமை (27) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவர் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த வேளை  குளவிக்கூடு கலைந்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

59 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here