தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில், சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

புளியம்பொக்கணை சந்திப்பகுதியில் போக்குவரத்து சோதனைக்காக வாகனங்களை நிறுத்திய பொலிசார், குறித்த டிப்பர் வாகனத்தையும் நிறுத்த முயன்றனர். ஆனால், பொலிசாரின் சமிக்ஞையை மீறி வாகனம் முன்னே சென்றுள்ளது.

இதையடுத்து, வாகனத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், பொலிசார் துப்பாக்கியை பயன்படுத்தி டிப்பரின் டயர்களை சுட்டுள்ளனர்.

இதில் வாகனம் காற்று போன நிலையில் நின்று விட்டது. ஆனால், சாரதி வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

பொலிசார் தற்போது, மணல் மற்றும் டிப்பர் வாகனத்தை கைப்பற்றி, சாரதியை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவே இந்தச் சோதனை மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

(கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here