நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மிதமான நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

நாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (04/03/2025) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும், வவுனியா, கேகாலை, நுவரெலியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் நல்ல நிலை நிலையிலும் காணப்பட்டது.

இன்று புதன்கிழமை (05/03/2025) அனைத்து நகரங்களிலும் மிதமான அளவைக் குறிக்கும் வகையில், நாள் முழுவதும் 52 – 100 க்கு இடையில் காற்றின் தரச்சுட்டெண் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு மிதமாான நிலையில் இருக்கும்.

அதிகமாக போக்குவரத்து நெரிசல்  காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here