நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

நாட்டில் நேற்று வியாழக்கிழமை (06) காற்றின் தரக் குறியீடு மிதமான அளவிலும், கொழும்பு மற்றும் காலியில் சற்று ஆரோக்கியமற்ற அளவிலும் காணப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை (3/7/2025) காற்றின் தரக்குறியீடு 40 மற்றும் 60க்கு இடையில் பதிவாகும். அதன்படி, பெரும்பாலான நகரங்களில் மிதமான நிலையிலும், வவுனியா, கேகாலை, நுவரெலியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் காணப்படும்.

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு மிதமாான நிலையில் காணப்படும்.

அதிகமாக போக்குவரத்து நெரிசல்  காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here