கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட வீதிகளில் இன்று திங்கட்கிழமை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திலிருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை ஊர்வலம் இடம்பெறவுள்ளதோடு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள விசேட ஆராதனைகள் காரணமாக வாகன போக்குவரத்து நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்வலம் காலை 7.00 மணிமுதல் கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் ஆரம்பமாகி பொன்ஜீன் சந்தியின் இடது பக்கம் திரும்பி கல்பொத்த சுற்றுவட்டத்தில் கல்பொத்த வீதியில் சென்று ஜம்பட்டா வீதியின் ஊடாக கடலோர வீதிக்கு சென்று புனித அந்தோனியார் தேவாலயம் வரையில் செல்லவுள்ளது.

எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, இயன்றளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here