Sunday, April 19, 2026
No menu items!

போதைப்பொருட்கள்

மாலைதீவில் மீன்பிடிப் படகிலிருந்து 355.9 கிலோ போதைப்பொருள் கைப்பற்றல்!

மாலைதீவு காவல்துறை சேவை, "அவிஷ்க புத்தா" என்ற இலங்கை மீன்பிடிப் படகிலிருந்து 355.9 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. நவம்பர் 7 அன்று மாலைதீவின் விசேட பொருளாதார வலயத்தில் குறித்த படகு இடைமறிக்கப்பட்டது. ஆரம்ப சோதனையின் போது, சந்தேகத்திற்கு உட்பட்ட பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவின் பேரில் நவம்பர் 10 அன்று படகில் விரிவான சோதனை...

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 331 பேர் கைது..!

நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 98 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 127 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 104 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன்  02 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

கொட்டிகாவத்தை, நாகஹமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 80 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 13 கிலோ 372 கிராம் ஹெராயின் மற்றும் 3 கிலோ 580 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதானவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெல்லம்பிட்டிய...

நூறு கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களுடன் இருவர் கைது..!

தங்காலை - குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து Freezer லொறியொன்றில் போதைப்பொருளை கடத்திச் செல்ல முயன்ற இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிவனொளிபாதமலை யாத்திரையில் கலந்து கொண்ட பலர் போதைப்பொருட்களுடன் மீட்பு..!

பல்வேறு வகையான போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிவனொளிபாதமலை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் காவல்துறையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 14 சந்தேக நபர்களும், 25 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கான...

சிகிரியாவில் விசேட சுற்றிவளைப்பு – சிக்கிய போதைப்பொருட்கள்..!

சிகிரியா பொலிஸார் 23 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர். சிகிரியா பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றவர்கள் போதைப்பொருளுடன் கைது!

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நூற்றுக்கும் அதிகமானோர் போதைப்பொருட்களுடன் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் . ஹட்டன் பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, “போதைப்பொருளற்ற சிவனொளிபாதமலை யாத்திரை ” என்ற தொனிப்பொருளின் கீழ் வெவ்வேறு வகையிலான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றவர்களை கைது செய்வதற்காக தற்போது பல சோதனை நடவடிக்கைகள்...

கப்பலில் இருந்து 500 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

இந்திய கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கையில், இந்தியப் பெருங்கடலில் 500 கிலோ போதைப்பொருட்களுடன் இரண்டு மீன்பிடிக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்தக் கப்பல்கள் மூலம் போதைப்பொருன் கடத்தப்படுவதாக கடற்படைக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில், இரண்டு கப்பல்களும் இந்திய கடற்படை வீரர்கள் வெற்றிகரமாக ஏறியதால்,...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இரண்டு பெண்கள் உட்பட 28 பேர் கைது !

கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இரண்டு பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜம்பட்டா வீதி, புனித அந்தோனி வீதி, இரத்னம் வீதி ஆகிய பகுதிகளிலேயே விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 12,900 மில்லிகிராம் ஐஸ் , 5,900 மில்லிகிராம்...

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 623 பேர் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 623 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 611 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 07 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள ஒருவரை புனர்வாழ்வு நிலையத்துக்கு...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img