மாலைதீவு காவல்துறை சேவை, “அவிஷ்க புத்தா” என்ற இலங்கை மீன்பிடிப் படகிலிருந்து 355.9 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

நவம்பர் 7 அன்று மாலைதீவின் விசேட பொருளாதார வலயத்தில் குறித்த படகு இடைமறிக்கப்பட்டது. ஆரம்ப சோதனையின் போது, சந்தேகத்திற்கு உட்பட்ட பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நீதிமன்ற உத்தரவின் பேரில் நவம்பர் 10 அன்று படகில் விரிவான சோதனை நடத்தப்பட்டதில் 24 பைகளில் 355.9 கிலோ போதைப்பொருட்கள் காணப்பட்டது. இதில் சுமார் 58.6 கிலோ ஹெரோயின் மற்றும் 297.3 கிலோ மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) அடங்கும்.

பயணத்தில் இருந்த ஐந்து சந்தேக நபர்கள் – 39, 42, 28, 34 மற்றும் 63 வயதுடைய இலங்கை ஆண்கள் – தற்போது மாலைதீவு காவல்துறை சேவை, MNDF, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை காவல்துறையுடன் கூட்டு விசாரணைக்காக காவலில் உள்ளனர்.

அதிகாரிகள் தெரிவிப்பதாவது, மீன்பிடிப் படகுகளைப் போக்குவரத்துச் சாதனமாகப் பயன்படுத்தி இந்தியப் பெருங்கடல் முழுவதும் செயல்படுவதாக நம்பப்படும் பிராந்திய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்கு இது ஒரு பெரிய அடியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here